Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 08 ஜூலை (ஹி.ச.)
கோவை மாவட்டம் வால்பாறை கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் அப்பகுதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் கடந்த 15 நாட்களாக ஆற்றில் இறங்கவும் குளிக்கவோ கால்நடைகளை மேய்க்கவும் கூடாது என மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் அங்கு காவலர்கள் இல்லாத காரணத்தினால் வரும் சுற்றுலா பயணிகள் ஆற்றுப்பகுதியில் இறங்கி ஆனந்த குளியலில் ஈடுபடுகின்றனர்.
மேலும் அப்பகுதியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் அதனுடைய தன்மை அறியாத சுற்றுலா பயணிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே அப்பகுதியில் காவல்துறை நியமனம் செய்து சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அறிவுரைகள் வழங்க வேண்டும் என வால்பாறை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இருப்பினும் ஆடுவதற்கு தடை இல்லை என அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் வாகனத்தில் கொட்டும் மழையிலும் இசை எழுப்பி அதற்கு தகுந்தாற்போல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் அருள்முருகன் அனைவரையும் வெளியேற்றி அப்பகுதிக்குள் யாரும் இறங்கினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுரை வழங்கப்பட்ட பின்னரே, சுற்றுலா பயணிகள் வெளியேறினர்.
மேலும் அதற்குப் பின் வந்த சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN