கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் ஜூலை 9 முதல் 12 வரை 'பிளாட் 50%' மெகா விற்பனை
கோவை, 08 ஜூலை (ஹி.ச.) கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட் சார்பில் நடத்தப்படும் எண்ட் ஆஃப் சீசன் சேல் ஜூலை 9 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், விற்பனை சலுகைகள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து நிர்வாகம்
லுலு


கோவை, 08 ஜூலை (ஹி.ச.)

கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட் சார்பில் நடத்தப்படும் எண்ட் ஆஃப் சீசன் சேல் ஜூலை 9 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், விற்பனை சலுகைகள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து நிர்வாகம் விளக்கமளித்தது.

இந்த செய்தியாளர் சந்திப்பில் லுலு ஹைப்பர் மார்க்கெட்டின் மண்டல மேலாளர் மகேசன், பொது மேலாளர் பாலாஜி, கொள்முதல் மேலாளர் சுனில் மேனன் மற்றும் சூப்பர் மார்க்கெட் மேலாளர் சின்னதுரை ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய அவர்கள்,

ஜூலை 9 முதல் 12 வரை நடைபெறும் இந்த மெகா விற்பனை தினமும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை நீட்டிக்கப்பட்ட நேரத்தில் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு பொருட்களுக்கு பிளாட் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுவதாகவும், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மொபைல் போன்கள், வீட்டு உபயோக மின்சாதனங்கள், அத்தியாவசிய மளிகைப் பொருட்கள், உணவுப் பொருட்கள், சமையலறை உபகரணங்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பு விலைச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில், சிறப்பு உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளதாக லுலு நிர்வாகம் தெரிவித்தது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P