மத்திய பிரதேச மாநிலத்தில் கிணற்றுக்குள் இறந்து கிடந்த 13 மான்கள்
போபால் , 08 ஜூலை (ஹி.ச.) மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கிணற்றை ஆய
A


போபால் , 08 ஜூலை (ஹி.ச.)

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில்

இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கிணற்றை ஆய்வு செய்தபோது, அழுகிய நிலையில் 13 மான்களும் ஒரு தெருநாயும் இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,

தெருநாய்கள் துரத்தியதால் தப்பி ஓடிய மான்கள், பாதுகாப்பு சுவர் உடைந்திருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தொடர்ந்து மான்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் விதிமுறைகளின்படி அடக்கம் செய்யப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பாக மான்கள் உயிரிழந்ததற்கான உண்மையான காரணம் குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA