Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 08 ஜூலை (ஹி.ச.)
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்படவுள்ள மனுவை அவசர வழக்காக விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு மறுத்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தரப்பில், நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் பூர்ணிமா அமர்வு முன்பு இந்த முறையீடு முன்வைக்கப்பட்டது.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதுடன், சிபிஐ விசாரணையும் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள்,
ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இந்த கோரிக்கையை அங்குதான் முன்வைக்கலாம் என்று தெரிவித்தனர்.
மேலும், மனுவை முறையாக தாக்கல் செய்தால், வழக்கமான நடைமுறையின்படி பட்டியலிட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
Hindusthan Samachar / GOKILA arumugam