ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சங்கள் மோசடி? – மருத்துவத்துறை அமைச்சரிடம் இளைஞர் புகார்
சென்னை, 08 ஜூலை (ஹி.ச.) சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கடந்த ஆட்சிக் காலத்தில் லட்சக்கணக்கான ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக இளைஞர் ஒருவர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ர
அருண்ராஜ்


சென்னை, 08 ஜூலை (ஹி.ச.)

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கடந்த ஆட்சிக் காலத்தில் லட்சக்கணக்கான ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக இளைஞர் ஒருவர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சரவணன் என்பவர், மருத்துவமனையில் கணினி தொடர்பான பணியில் அரசு வேலை பெற்றுத் தருவதாக நம்பவைத்து தன்னிடம் பணம் பெற்றதாகவும், பின்னர் போலியான பணி நியமன ஆணை வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அந்த நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டபடி இன்று பணியில் சேர மருத்துவமனைக்கு வந்தபோதுதான், அது போலியான ஆணை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மோசடி குறித்து அமைச்சர் அருண்ராஜிடம் நேரில் புகார் அளித்த நிலையில், சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

அமைச்சரின் உத்தரவையடுத்து, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞர் சரவணன் செய்தியாளர்களிடம் தனது வேதனையை பகிர்ந்து கொண்டார்.

Hindusthan Samachar / GOKILA arumugam