கூட்டணியில் உள்ள கட்சிகளை நண்பர்களாக பார்க்க கூடிய கட்சி தவெக - அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை, 08 ஜூலை (ஹி.ச.) சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, முதலமைச்சர் அறிவுறுத்தல் பேரில் அமெரிக்காவில் உள்ள தமிழர்களின் ஆண்டு விழாவில் பங்கேற்றேன். தமிழ் பணியுட்ன் அமெரிக்கா
Minister Rajmohan


சென்னை, 08 ஜூலை (ஹி.ச.)

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

முதலமைச்சர் அறிவுறுத்தல் பேரில் அமெரிக்காவில் உள்ள தமிழர்களின் ஆண்டு விழாவில் பங்கேற்றேன். தமிழ் பணியுட்ன் அமெரிக்கா பயணத்தை முடித்து வந்து உள்ளேன்.

சிகாகோவில் 2019ம் ஆண்டு நடந்தது.

உலக தமிழர்களை இணைக்க கூடிய பணிக்ள் ஆரம்பம் செய்து உள்ளோம்.

அமைச்சர், எம்.எல்.ஏ., ஆய்வு பணி செய்வது மரபு தான். அமைச்சர் வீடியோ எதுவும் எடுக்கவில்லை. அவரே தமிழ் வழியில் படித்தவர்.

பள்ளியில் பிண்புலத்தை கேட்க கூடாது. அவர் அக்கா ஸ்தானத்தில் கேட்டதால் தவறாக எடுக்க கூடாது.

தமிழகத்தில் 50 ஆண்டுகளாக செய்த சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை தான் நாம் அனுபவித்து வருகிறோம்.

தெரு எல்லாம் போதை பொருள் நடமாட்டம். சட்டமன்றத்தில் பேசி உள்ளேன். ஒரு நாள் எல்லாமே சரி செய்யப்படும். போதை கலாச்சாரத்தை அழித்து வருகிறோம்.

3ம் வகுப்பு வரை பாடப் புத்தகத்தை மாற்றி உள்ளோம். டெக்சை குறைத்து வண்ணப்படங்களை அதிகமாக்கி உள்ளோம். அடுத்தடுத்த வகுப்புகளுக்கான பணிகள் நடக்கிறது.

பாடப்புத்தகம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

கூட்டணியில் உள்ள கட்சிகளை நண்பர்களாக பார்க்க கூடிய கட்சி தவெக. இது தான் ஜனநாயகம்.

எந்தவித நெருக்கடியும் தர மாட்டோம். திருமாவளவனின் பேச்சு ஜனநாயகத்தின் வெளிப்பாடாக பார்க்கிறோம்.

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி தந்ததன் முலம் பல்லாயிரம் கோடி ஊழலை தடுத்ததை அனுகுலமாக பார்க்க கூடாது.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்க வேண்டும். அரசு ப்ள்ளிகள் தான் எனது கண்கள்.

கழிவறைகள் மூடக்கூடியதாக இருக்க வேண்டும் என முதல் கையெழுத்து போட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / ANANDHAN