Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜூலை (ஹி.ச)
பருவமழை காலம் நெருங்கி வருவதை முன்னிட்டு, நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்தல், பாதுகாப்பாக வைத்தல், அரவைக்கு அனுப்புதல் உள்ளிட்ட ஆலோசனைகளை உணவுத்துறை வழங்கியுள்ளது.
அதிலும் குறிப்பாக கொள்முதல் செய்யப்படும் நெல்லில் ஈரப்பதத்தின் அளவு 17 சதவீதத்துக்கு மிகாமல் இருப்பதை அதிகாரிகள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என்றும் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மழைக்காலத்தில் நெல் நனையாமல் பாதுகாக்கவும், சேமிப்பின் போது பூச்சி மற்றும் பூஞ்சைத் தாக்குதலால் தரம் குறைவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை அவசியம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் தார்ப்பாய்கள், மரக்கட்டைகள், ஈரப்பதமானிகள் உள்ளிட்ட உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், கிடங்குகளின் மேற்கூரை மற்றும் வடிகால் வசதிகளை சீரமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளிடம் இருந்து தரமான நெல்லை மட்டுமே கொள்முதல் செய்து, உணவு தானியங்கள் வீணாவதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் உணவுத்துறை வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b