'நலம்AI' வாட்ஸ்அப் சேவை இன்று முதல் அறிமுகம் - வீட்டிலிருந்தே அரசு மருத்துவ சேவைகள் பெறலாம்
சென்னை, 08 ஜூலை (ஹி.ச.) பொதுமக்களுக்கு அரசு மருத்துவ சேவைகள் எளிதில் சென்றடையும் வகையில், ''நலம்AI'' என்ற புதிய வாட்ஸ்அப் Chatbot சேவையை மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று தொடங்கி வைக்கிறார். தம
Nal


சென்னை, 08 ஜூலை (ஹி.ச.)

பொதுமக்களுக்கு அரசு மருத்துவ சேவைகள் எளிதில் சென்றடையும் வகையில், 'நலம்AI' என்ற புதிய வாட்ஸ்அப் Chatbot சேவையை மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவையின் மூலம், பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே ஒருமுறை பதிவு (One-Time Registration), புறநோயாளர் (OP) முன்பதிவு (Appointment Booking) உள்ளிட்ட மருத்துவ சேவைகளை வாட்ஸ்அப் மூலமாக எளிதாகப் பெற முடியும்.

முதற்கட்டமாக, சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் நெஞ்சக நோய் பிரிவில் இச்சேவை சோதனை அடிப்படையில் இன்று முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அரசு மருத்துவ சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ