Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 08 ஜூலை (ஹி.ச.)
கடந்த மே 3-ஆம் தேதி நடத்தப்பட்ட இளநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டதால், அதற்கான மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடத்தப்பட்டது.
மே 3-ஆம் தேதி தேர்வெழுதிய மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய விண்ணப்பக் கட்டணம் திரும்பி அளிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
அதன்படி, மாணவர்கள் இணையதளம் வழியாக வங்கி விவரங்களை வழங்க வழிவகை செய்யப்பட்டது.
இளநிலை நீட் தேர்வின் அதிகாரப்பூர்வ இணையதள வழியாக, மாணவர்கள் அவர்களின் வங்கி விவரங்களை வழங்குவதல், திருத்தம் மேற்கொள்ளுவதல் மற்றும் விவரங்களை உறுதி செய்வதற்கு ஜூலை 7-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது விண்ணப்பத்தை திரும்பி பெற கால அவகாசம் ஜூலை 14-ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை வங்கி விவரங்களை உறுதி செய்த மாணவர்களுக்கான கட்டணத்தை திரும்ப பெறும் பணி தொடங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P