ஓரிரு வாரங்களில் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் -அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
சென்னை, 08 ஜூலை (ஹி.ச.) சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை 126-வது வார்டில், மாமன்ற உறுப்பினர் அமிர்தவர்ஷினி நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட புதிய உடற்பயிற்சி கூடத்தை உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் தி
வெங்கட்ரமணன்


சென்னை, 08 ஜூலை (ஹி.ச.)

சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை 126-வது வார்டில், மாமன்ற உறுப்பினர் அமிர்தவர்ஷினி நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட புதிய உடற்பயிற்சி கூடத்தை உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,

பெண்கள் உடல் மற்றும் மனநலத்தை பேணுவதற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியமானது என்றும், மன அழுத்தத்திலிருந்து விடுபட உடற்பயிற்சி பெரிதும் உதவும் என்றும் தெரிவித்தார்.

மேலும், ஓரிரு வாரங்களுக்குள் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

ஆட்சி கவிழ்ந்து விடும் என்று எதிர்க்கட்சிகள் கூறுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,

மக்களுக்காக மனசாட்சியுடன் செயல்படும் ஆட்சி நடைபெற்று வருகிறது. கட்சி பாகுபாடின்றி மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதற்கு மக்களே தக்க பதில் அளிப்பார்கள் என்றார்.

விழாவில் மேயர் பங்கேற்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு,

எங்களுக்கு எந்தவித பாரபட்சமும் இல்லை. அனைவருடனும் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

சிலர் சில காரணங்களால் பங்கேற்காமல் இருந்திருக்கலாம் என்று அமைச்சர் விளக்கம் அளித்தார்.

வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு குறித்து பேசிய அவர்,

முதலமைச்சரின் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்ற நோக்கில் சிலர் புனையப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.

தமிழக அரசின் மக்கள் நல நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாததால் இதுபோன்ற குறைகளை கூறி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam