Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜூலை (ஹி.ச.)
சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே கூலி தொழிலாளி ஒருவரிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற வழக்கில், அப்பகுதியில் பிரபல கொள்ளையனாக அறியப்படும் மணி (என்கிற மணிமாறன்) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கொருக்குப்பேட்டை போலீசார், தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் குற்றவாளியை கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியாகச் செல்லும் பொதுமக்களை மிரட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்டள்ள மணி மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மணியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மற்றும் பணத்தை போலீசார் மீட்டனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கொருக்குப்பேட்டை ரயில் நிலைய பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் செல்போன் பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்திருந்த நிலையில், இந்த கைது நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / vidya.b