Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 08 ஜூலை (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மடத்தானூரில் தமிழ்செல்வன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த 4 குழந்தைகள் உட்பட 10 பேரை அதிகாரிகள் மீட்டனர்.
ரகசிய புகாரின் பேரில் குழந்தை தொழிலாளர் ஆணையர் சங்கர் தலைமையிலான குழுவினர் நடத்திய அதிரடி சோதனையில் 3 ஆண்கள், 3 பெண்கள், 4 குழந்தைகள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி, கவுன்சிலிங் அளித்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டும் இதே கிராமத்தில் கொத்தடிமைகள் மீட்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சூளை உரிமையாளர் தமிழ்செல்வன் மீது போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? இன்னும் யாராவது கொத்தடிமைகளாக உள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN