தேசிய கல்விக் கொள்கையின் கீழ் பாடப்புத்தகங்கள் வெளியீடு
புதுடெல்லி, 08 ஜூலை (ஹி.ச.) தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-க்கு ஏற்ப உருவாக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 9-ம் வகுப்பு வரையிலான பெரும்பாலான திருத்தப்பட்ட பாடப்புத்தகங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT)
தேசிய கல்விக் கொள்கையின் கீழ் பாடப்புத்தகங்கள் வெளியீடு


புதுடெல்லி, 08 ஜூலை (ஹி.ச.)

தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-க்கு ஏற்ப உருவாக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 9-ம் வகுப்பு வரையிலான பெரும்பாலான திருத்தப்பட்ட பாடப்புத்தகங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) வெளியிட்டுள்ளது.

9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தின் 2-ம் பாகம் மற்றும் கணிதப் பாடப்புத்தகம் ஆகியவை மட்டுமே இன்னும் வெளியிடப்படாமல் உள்ளன. இவை ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் பருவத்தில் வகுப்பறைகளில் பயன்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே இந்த புத்தகங்கள் கிடைக்கும் என NCERT அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய கல்விக் கொள்கை 2020-ஐத் தொடர்ந்து, பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCF-SE) 2023-க்கு ஏற்ப NCERT புதிய பாடப்புத்தகங்களை உருவாக்கியுள்ளது.

1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான புதிய பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, அச்சு மற்றும் டிஜிட்டல் வடிவங்களில் கிடைக்கின்றன என NCERT தனது அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும், 9-ம் வகுப்புக்கான புதிய பாடப்புத்தகங்கள் தயாரிப்பில் உள்ளதாகவும், 2026-27 கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

9-ம் வகுப்புக்கான வரைவு பாடத்திட்டங்கள் கருத்துகளைப் பெற NCERT இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

10 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் 2027-28 கல்வியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும்.

அதேசமயம், 2026-27 கல்வியாண்டில் இந்த வகுப்புகளுக்கு தற்போதுள்ள புத்தகங்களே தொடர்ந்து பயன்படுத்தப்படும்.

ஐடிஎல் பொதுப் பள்ளியின் முதல்வர் சுதா ஆச்சார்யா இது குறித்து கூறுகையில்,

முதல் பருவத்திற்கு தேவையான அனைத்து புத்தகங்களும் கிட்டத்தட்ட கிடைத்துவிட்டன. 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாகம் 2 மற்றும் கணித புத்தகங்கள் மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்றன.

இவை இரண்டாம் பருவத்திற்கானவை, ஆகஸ்ட் மாதத்திற்குள் கிடைத்துவிடும் என்பதால் கற்பித்தலில் எந்த தடையும் இருக்காது.

குறைந்தது இரண்டு இந்திய மொழிகளைப் படிக்க வேண்டிய 6-ம் வகுப்பில், பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தை வழங்குகின்றன.

மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் அதிகளவில் தேர்வு செய்யப்படுகிறது.

9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்பமான வெளிநாட்டு மொழிகளாக பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தொடர்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

7, 8 மற்றும் 9-ம் வகுப்புகளில் ஏற்கனவே இரண்டு வெளிநாட்டு மொழிகளைப் படிக்கும் மாணவர்கள், 10-ம் வகுப்பு வரை அதே மொழிச் சேர்க்கைகளுடன் தொடரலாம் என சிபிஎஸ்இ சமீபத்தில் மும்மொழிக் கொள்கை அமலாக்கத்தை தளர்த்தியதை அடுத்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்ட கட்டமைப்பின் கீழ் 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு குறைந்தது இரண்டு இந்திய மொழிகளைப் படிக்க வேண்டும் என்ற தேவை எதிர்காலத்தில் தொடரும்.

Hindusthan Samachar / vidya.b