Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜூலை (ஹி.ச.)
தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றம்த்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற உள்ளது.
அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால், விசாரணையை பிற்பகலில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அரசுத் தரப்பு கோரிக்கை விடுத்தது.
இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன், வழக்கின் விசாரணையை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / P YUVARAJ