நாமக்கல்லில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - த.வெ.க பிரமுகர் உள்பட இருவர் கைது
நாமக்கல், 08 ஜூலை (ஹி.ச) நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு அருகே 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் தமிழகத்தில் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழக பிரமுகர் தங்கவேல் (வயது 40 ) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய இருவரை ப
நாமக்கல்லில் சிறுமிக்கு  பாலியல் வன்கொடுமை - த.வெ.க பிரமுகர் உள்பட இருவர் கைது


நாமக்கல், 08 ஜூலை (ஹி.ச)

நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு அருகே 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் தமிழகத்தில் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழக பிரமுகர் தங்கவேல் (வயது 40 ) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமி பலரால் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும், இந்த கொடுமையின் காரணமாக சிறுமிக்கு பலமுறை கருக்கலைப்பு செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான தகவலும் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கைதான இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமிக்கு நேர்ந்த கொடுமைகளில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

15 வயது சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடுமை அப்பகுதியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b