Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 08 ஜூலை (ஹி.ச.)
தெற்கு குஜராத்தில் இருந்து மத்திய கேரளா வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடுமெனவும் கணிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P