அரசு மதுபானக் கடையை உடைத்து 5 பீர் பாட்டில் உட்பட சில்லறை பணம் திருட்டு
ராணிப்பேட்டை, 08 ஜூலை (ஹி.ச.) ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள மேல்புதுப்பாக்கம் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல் இரவு மதுபான கடை ஊழியர்கள் விற்பனை செய்த மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட பணத்தை அதே அறை
Valapanthal Police Station


ராணிப்பேட்டை, 08 ஜூலை (ஹி.ச.)

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள மேல்புதுப்பாக்கம் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் வழக்கம் போல் இரவு மதுபான கடை ஊழியர்கள் விற்பனை செய்த மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட பணத்தை அதே அறையில் உள்ள லாக்கரில் வைத்து பூட்டி சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை மதுபான கடை அருகே உள்ள விளை நிலத்தை பார்க்க வந்த விவசாயி மதுபான கடை பின்புறம் துளையிடப்பட்டதை பார்த்து உடனடியாக வாழைப்பந்தல் காவல்துறையினருக்கும் மதுபானக்கடை ஊழியருக்கும் தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மதுபானக் கடையை துளையிட்ட மர்ம நபர் கடையில் இருந்த ஐந்து பீர் பாட்டில் மற்றும் சில்லறை பணத்தை மட்டுமே திருடியதுடன் கடையின் அருகிலேயே அமர்ந்து 4 பீர் மட்டுமே குடித்து விட்டு ஒரு பாட்டிலை விட்டு சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும் கைரேகை நிபுணர்கள் வர வைக்கப்பட்டு கைரேகை உட்பட தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN