Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 08 ஜூலை (ஹி.ச.)
திருநெல்வேலி பத்தமடை பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 27). இவர் தனது நண்பர்கள் ஏழு பேருடன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கல் ரயில் நிலையத்தில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இரவு தூங்கிய கார்த்திகேயனை திடீரென காணவில்லை. நள்ளிரவில் எழுந்து பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து அந்த பகுதியில் பார்த்த பொழுது அவர் ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்தது தெரிய வந்தது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கார்த்திகேயன் நண்பர்கள் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விருத்தாசலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்து கிடந்த கார்த்திகேயன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்
அவர் இரவு ரயில் தண்டவாளத்தை கடந்து இயற்கை உபாதை கழிக்க சென்ற பொழுது சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடி சென்ற விரைவு ரயில் மோதி உயிரிழந்தது தெரிய வந்தது.
இதையடுத்து ரயில் மோதி கார்த்திகேயன் உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரது உடலை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரதேச பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN