Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாடு மாநில பட்ஜெட்டை முன்னிட்டு, தலைமைச் செயலகத்தில் வேளாண்துறை தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் வேளாண்துறை அமைச்சர் வினோத் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வேளாண்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், துறை உயர் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
வேளாண்துறைக்கான புதிய பட்ஜெட் அறிவிப்புகள், விவசாயிகளின் கோரிக்கைகள், வேளாண் உற்பத்தி அதிகரிப்பு, நீர்ப்பாசன வசதிகள் மேம்பாடு, பயிர் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு, விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள், வேளாண் இயந்திரமயமாக்கல், மதிப்புக்கூட்டப்பட்ட வேளாண் பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக கருத்துகள் பரிமாறப்பட்டன.
மேலும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை சமாளிக்கும் நடவடிக்கைகள், நீர் மேலாண்மை, சிறு மற்றும் குறைந்த நிலம் கொண்ட விவசாயிகளுக்கான ஆதரவு திட்டங்கள், வேளாண் சந்தைப்படுத்தல் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் புதிய முயற்சிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில் விவசாயிகளின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் வகையில் புதிய அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என்பதையும், வேளாண்துறையின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam