Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 09 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அண்டை மாநிலங்களில் இருந்து தொடர்ந்து கடத்தி வரப்படுவதை தடுக்க மாவட்ட எல்லையோர பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து சட்டவிரோதமாக குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் கடத்தி வரப்பட்ட குட்கா மூட்டைகளை போலீசார் கண்டுபிடித்து கைப்பற்றினர்.
மொத்தம் 195 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக சுரேஷ் என்ற 35 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட நபருக்கு வேறு யாரேனும் உடந்தையாக செயல்பட்டனரா என்பது குறித்தும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b