நெல்லையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் - கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது
நெல்லை, 09 ஜூலை (ஹி.ச.) வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரகசி விற்பனை நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. இதனை முன்னிட்டு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நெல்லை மாவட்டத்தின் வண்ணாரப்பேட்டை
நெல்லையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் - கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது


நெல்லை, 09 ஜூலை (ஹி.ச.)

வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரகசி விற்பனை நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன.

இதனை முன்னிட்டு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நெல்லை மாவட்டத்தின் வண்ணாரப்பேட்டை பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இருவரை சோதனையிட்டபோது, அவர்கள் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டோர் பாஸ்கர், வயது 39, மற்றும் முருகன், வயது 37 என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கு வேறு யாருடனாவது தொடர்பு உள்ளதா, கஞ்சா விற்பனை வலைப்பின்னலின் முழு விவரம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b