அதிமுக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்த பாலகிருஷ்ணன் ரெட்டி
சென்னை, 09 ஜூலை (ஹி.ச.) சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. முதலில் கிருஷ்ணகிரி மாவட்ட ந
பாலகிருஷ்ணன்


சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

முதலில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளுடனும், அதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளராக அசோக்குமார் செயல்பட்டு வரும் நிலையில், மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான பாலகிருஷ்ணன் ரெட்டி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அவர் வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.

அவருக்குப் பதிலாக, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக எம்.ஜி.எம். ராமு நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்த பாலகிருஷ்ணன் ரெட்டிக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பதவியை ஏற்க அவர் மறுத்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பாலகிருஷ்ணன் ரெட்டி எம்எல்ஏ பங்கேற்கவில்லை. அவரது புறக்கணிப்பு அதிமுக வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P