திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல் - சர்வ தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு
திருமலை , 09 ஜூலை (ஹி.ச.) திருமலை ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக திருமலைக்கு வந்துள்ளதால், திருமாட வீதிகள் மற்றும் தரிசன வரி
A


திருமலை , 09 ஜூலை (ஹி.ச.)

திருமலை ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக திருமலைக்கு வந்துள்ளதால், திருமாட வீதிகள் மற்றும் தரிசன வரிசைகள் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன.

வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள அனைத்து அறைகளும் பக்தர்களால் நிரம்பியுள்ளன.

இதனால் வெளியிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து வருகின்றனர்.

நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன் இல்லாத பொது பக்தர்கள், ஏழுமலையானை தரிசனம் செய்ய சுமார் 18 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

காத்திருப்பு வரிசையில் உள்ள பக்தர்களுக்கு குடிநீர், பால், காபி மற்றும் அன்னதான பிரசாதங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, நேற்று ஒரே நாளில் 82 ஆயிரத்து 172 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வழிபட்டனர். 36 ஆயிரத்து 978 பக்தர்கள் கல்யாணக்கட்டாவில் தலைமுடி காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

மேலும், ஏழுமலையான் கோவில் உண்டியல் மூலம் மட்டும் ரூ.5 கோடியே 15 லட்சம் காணிக்கை வருவாய் கிடைத்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA