Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 09 ஜூலை (ஹி.ச)
சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், நீதிக்கட்சியின் முன்னணி தலைவருமான பனகல் அரசரின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர்
ச.ஜோசப் விஜய் சமூக வலைதளத்தில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சர் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நீதிக்கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராகத் திகழ்ந்த அவர், அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதிப்படுத்தினார். அவரது முற்போக்கான சீர்திருத்தங்கள், பின்னாளில் தந்தை பெரியார் முன்னெடுத்த சுயமரியாதை மற்றும் சமூகநீதிப் போராட்டங்களுக்கு வலுவான அடித்தளமாக அமைந்தன.
கல்வி வளர்ச்சிக்கான அவரது அக்கறையும், மக்கள் நலன் சார்ந்த நிர்வாகப் பார்வையும் இன்றும் வழிகாட்டும் உயரிய மரபுகளாகத் திகழ்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, பனகல் அரசரின் புகழ் தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ