பனகல் அரசரின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ் வணக்கம்
சென்னை, 09 ஜூலை (ஹி.ச.) சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் பனகல் அரசரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவ
பனகல் அரசரின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ் வணக்கம்


சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் பனகல் அரசரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

தேடற்கரிய ஒப்புயர்வற்ற நமதருமைத் தலைவர்” எனத் தந்தை பெரியாரால் போற்றப்பட்ட பனகல் அரசரின் பிறந்த நாள் இன்று. பனகல் அரசர் குறித்த புத்தகமே கருணாநிதியின் அரசியலில் ஆர்வத்தை விதைத்தது.

சமூக நீதியின் அடித்தளமான வகுப்பு வாரி பிரதிநிதித்துவ ஆணை, இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, மருத்துவம் பயில சமஸ்கிருதம் கட்டாயமில்லை என்ற உத்தரவு எனத் தமது ஆட்சிக் காலத்தில் அவர் செய்த சாதனைகள் தாம் நம் திராவிட மாடலுக்கு அடிப்படை. நம் கொள்கை முன்னோர்கள் நமக்குத் பெற்றுத் தந்த உரிமைகளை உயிரெனக் காப்போம்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b