டி20 வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்திய அணி? - இங்கிலாந்துடன் இன்று 4-வது போட்டி
நாட்டிங்காம் , 09 ஜூலை (ஹி.ச.) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்ட நிலையில், அடுத்த இரு ஆட்டங்களிலும் இங்கிலாந்து அணி வ
A


நாட்டிங்காம் , 09 ஜூலை (ஹி.ச.)

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்ட நிலையில், அடுத்த இரு ஆட்டங்களிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. தொடரை இழக்காமல் இருக்க இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கடந்த இரு போட்டிகளில் எதிர்பார்த்த அளவுக்கு ரன் குவிக்காத 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இன்றைய ஆட்டத்தில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதே நேரத்தில், சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி விளையாடிய முதல் 5 ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்ய முடியவில்லை.

இதில் 4 தோல்விகளும், ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதும் அடங்கும். 1990-ம் ஆண்டு முகமது அசாருதீனுக்கு பிறகு, கேப்டனாக தனது முதல் 5 ஆட்டங்களில் வெற்றி பெறாத இந்திய கேப்டன் என்ற நிலை ஸ்ரேயாஸ் அய்யருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று கேப்டனாக தனது முதல் வெற்றியை பதிவு செய்ய ஸ்ரேயாஸ் அய்யர் முனைப்புடன் உள்ளார்.

தொடரை கைப்பற்றும் வாய்ப்பை தக்கவைக்க இங்கிலாந்து அணியும், தொடரை சமநிலைக்கு கொண்டு வர இந்திய அணியும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இரு அணிகள் மோதும் இந்த போட்டி இன்று இரவு 10 மணிக்கு தொடங்குகிறது.

போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1, டென் 4 மற்றும் டென் 5 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA