Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)
ஹெச்.வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வர் விஜய்,
பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உட்பட மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜனநாயகன்
இத்திரைப்படம் கடந்த ஜனவரி 9-ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் ஏற்பட்ட சிக்கலால், படத்தின் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.
இதனால் ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போனது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தவுடன் இது தான் எனது கடைசி திரைப்படம் என அறிவிக்கப்பட்டதால், இத்திரைப்படம், தேர்தலுக்கு முன்பாகவே சென்சார் சான்றிதழ் பெற்று வெளியிட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், தணிக்கை வாரியம் இத்திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கவில்லை.
இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து அதில் நடிகர் விஜய் வெற்றி பெற்று முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
அதன் பிறகு இன்று
(ஜூலை 9)
ஜனநாயகன் திரைப்படத்திற்கு
ஏ (A) சான்றிதழ் வழங்கியுள்ளது.
கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான 'பகவதி' திரைப்படத்திற்குப் பிறகு, சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜனநாயகன் திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் பெறும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜயயும் தமிழக முதல்வருமான விஜய்க்கு சிறுவர், சிறுமியர்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் அதிகம் என்பதால், இந்த ஏ சான்றிதழ் வசூலில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற கவலை ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்குஎழுந்துள்ளது.
Hindusthan Samachar / Durai.J