Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 09 ஜூலை (ஹி.ச.)
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் சிவமொக்கா, குடகு, சிக்மங்களூரு, தட்சிண கனடா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி ஆகிய இரு அணைகளுக்கும் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக கிருஷ்ணராஜ சாகர் அணையின் முழு கொள்ளளவு 124.80 அடியில் நேற்று அணையின் நீர் மட்டம் 83.64 அடியாக இருந்த நிலையில் இன்று 2 அடி உயர்ந்து அணையின் தற்போதைய நீர் மட்டம் 85.66 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு நீர் வரத்து நேற்று 7531 கன அடியாக இருந்த நிலையில் இன்று 12,694 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து நீர் திறப்பு 734 கன அடியாக உள்ளது. அதேபோல் கபினி அணையின் முழு கொள்ளளவு 84 அடியில் உள்ளது.
நேற்று அணையின் நீர் மட்டம் 61.64 அடியாக இருந்த நிலையில் இன்று அணையின் தற்போதைய நீர் மட்டம் 3 அடி உயர்ந்து 64.53 அடியாக உயர்ந்துதுள்ளது.
அணைக்கு நீர் வரத்து நேற்று 10,757 கன அடியாக இருந்த நிலையில் இன்று 14,574 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து நீர் திறப்பு 500 கன அடியாக உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN