இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் பிறந்த தினம்(ஜூலை,09) இன்று...!
சென்னை, 09 ஜூலை (ஹி.ச.) கைலாசம் பாலச்சந்தர் (கே. பாலசந்தர்) என்பவர் தமிழ் சினிமாவின் ஈடுஇணையற்ற நாடக ஆசிரியர், திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். திரையுலகில் இவருடைய அசாத்திய சாதனைகளுக்காக இயக்குநர் சிகரம் என்
ம்


சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)

கைலாசம் பாலச்சந்தர் (கே. பாலசந்தர்) என்பவர் தமிழ் சினிமாவின் ஈடுஇணையற்ற நாடக ஆசிரியர், திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.

திரையுலகில் இவருடைய அசாத்திய சாதனைகளுக்காக இயக்குநர் சிகரம் என்று அன்போடு அழைக்கப்படுகிறார்

தமிழ் திரையுலக இயக்குநர், கே.பாலசந்தர்

(Kailasam Balachander) 1930ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில் பிறந்தார்.

1964ஆம் ஆண்டு திரைப்படத்திற்கு வசனம் எழுதி, சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.

அதற்கு அடுத்த ஆண்டில் இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் நீர்க்குமிழி மகத்தான வெற்றி பெற்றது.

இவர் 'கவிதாலயா' என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, ஏராளமான நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவர் பத்மஸ்ரீ விருது, தாதா சாகேப் பால்கே விருது (2010), தேசிய விருதுகள், மாநில அரசின் விருதுகள், அறிஞர் அண்ணா விருது, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

வழக்கமான பொழுதுபோக்குத் திரைப்படங்கள் போலல்லாமல், நடுத்தர வர்க்கப் பின்னணி, சிக்கலான மனித உறவுகள் மற்றும் தண்ணீர் பஞ்சம் போன்ற அழுத்தமான சமூகப் பிரச்சினைகளைத் தனது கதைகளில் கையாண்டார்.

அவர் 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

சமூகத்தில் பேச மறுத்த பல புரட்சிகரமான கருத்துக்களையும், பெண் மையக் கதாபாத்திரங்களையும் முதன்மைப்படுத்திப் படங்களை எடுத்தார்.

தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் (முக்கியப் பாத்திரங்கள்) ஆகியோரை அறிமுகப்படுத்தி, செதுக்கிய பெருமை இவரையே சாரும்.

மேலும் விவேக், பிரகாஷ் ராஜ், நாசர், சரிதா, சுஜாதா போன்ற பல நூறு நட்சத்திரங்களை திரையுலகிற்கு அறிமுகம் செய்தார்.

விருதுகள் & அங்கீகாரங்கள்:

தாதாசாஹெப் பால்கே விருது (இந்திய சினிமாவின் உயரிய விருது)பத்மஸ்ரீ விருது (இந்திய அரசு)பல தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகள் பெற்றார்.

திரையுலகில் வெற்றி உலா வந்த கலையுலக பாரதி கே.பாலசந்தர் 2014ஆம் ஆண்டு மறைந்தார்.

Hindusthan Samachar / Durai.J