Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 09 ஜூலை (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் வேதக்கார தெருவை சேர்ந்த சின்னவீரபத்திரன் மகன் ரமேஷ். இவர் கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்று உள்ளார்.
இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை ஜூலை 6ந்தேதி அன்று உறவினர் வீட்டுக்கு நிகழ்ச்சிக்காக சென்னை சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகை திருடப்பட்டு உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
உடனடியாக அருகிலுள்ள கச்சிராயபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை யடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி ஷஹ்னாஸ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து தடவியல் நிபுணர்கள் வீட்டில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
Hindusthan Samachar / ANANDHAN