Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 09 ஜூலை (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசுத் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பத்மஜா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்ச்சியில் அதிமுக சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ், தவெக கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஆய்வு கூட்டத்தில் பேசிய அமைச்சர் வன்னி அரசு,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிறைய வழக்குகள் பதியப்பட்டுள்ளது குற்றங்கள் குறைந்த மாவட்டமாவது எங்களது இலக்கு எனவும் கடந்து முறை ஆய்வுக் கூட்டத்தில் பேச முடியாததை தற்போது இந்த கூட்டத்தில் தொடரப் போவதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளான வீட்டுமனை பட்டா மற்றும் கருணை அடிப்படையிலான சமையல் பணி ஆணை வழங்கினார்.
மேலும் இன்றும் நாளையும் பல்வேறு பணிகளை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN