கரூரில் ரூ.1,700 கோடி முதலீட்டில் புதிய காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நாளை அடிக்கல்; 13,500 பேருக்கு வேலைவாய்ப்பு
கரூர், 09 ஜூலை (ஹி.ச.) கரூர் மாவட்டத்திற்கு நாளை (10.07.2026, வெள்ளிக்கிழமை) வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.1,700 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் புதிய தொழிற்சாலைக்கு அ
விஜய்


கரூர், 09 ஜூலை (ஹி.ச.)

கரூர் மாவட்டத்திற்கு நாளை (10.07.2026, வெள்ளிக்கிழமை) வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.1,700 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி, கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் வழங்குகிறார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மனவாசி ஊராட்சியில், தோல் அல்லாத (Non-Leather) காலணிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

இந்த புதிய தொழிற்சாலை செயல்பாட்டிற்கு வந்த பிறகு, சுமார் 13,500 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டில் இந்தத் திட்டம் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அரசு விழாவில் பல்வேறு அரசுத் துறைகளில் பணியமர்த்தப்பட உள்ள 32 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam