மகாராஷ்டிராவில் பொது சிவில் சட்டம் வரைவு விதிகளைத் தயாரிக்க குழு - முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்
மும்பை, 09 ஜூலை (ஹி.ச.) மகாராஷ்டிராவில் பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code - UCC) அமல்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அதற்கான வரைவு விதிகள் மற்றும் சட்ட முன்வரைவுகளைத் தயாரிக்க 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை முதல்வர் தேவேந்திர பட்னாவ
பட்னாவிஸ்


மும்பை, 09 ஜூலை (ஹி.ச.)

மகாராஷ்டிராவில் பொது சிவில் சட்டத்தை

(Uniform Civil Code - UCC) அமல்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அதற்கான வரைவு விதிகள் மற்றும் சட்ட முன்வரைவுகளைத் தயாரிக்க 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

இந்தக் குழுவுக்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தனிப்பட்ட (Personal) சட்டங்களுக்குப் பதிலாக, திருமணம், விவாகரத்து, பராமரிப்பு, தத்தெடுப்பு, வாரிசுரிமை உள்ளிட்ட சிவில் விவகாரங்களில் அனைவருக்கும் பொதுவான சட்டத்தை உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பேசிய உள்துறை இணை அமைச்சர் யோகேஷ் கடம், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மாநில அரசு முழுமையான உறுதியுடன் இருப்பதாகவும், குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் சட்ட மசோதா கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

தற்போதைய அறிவிப்பின் மூலம், வரைவு சட்டம் தயாரிக்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. இந்த வரைவு, மகாராஷ்டிர சட்டப்பேரவையின் வரவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரகாண்ட் உள்ளிட்ட சில மாநிலங்கள் ஏற்கனவே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியுள்ள நிலையில், மகாராஷ்டிராவும் அதே பாதையில் முன்னேறுவது தேசிய அளவில் முக்கிய அரசியல் மற்றும் சட்டரீதியான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P