மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு - நீர்வரத்து 25 கன அடியாக குறைவு
சேலம், 09 ஜூலை (ஹி.ச.) மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 27 கன அடியில் இருந்து 25 கன அடியாக குறைந்துள்ளதால், நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று 76.29 அடியாக இருந்த அணையின் நீ
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு - நீர்வரத்து 25 கன அடியாக குறைவு


சேலம், 09 ஜூலை (ஹி.ச.)

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 27 கன அடியில் இருந்து 25 கன அடியாக குறைந்துள்ளதால், நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது.

நேற்று 76.29 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி 76.13 அடியாக சரிந்துள்ளது. தற்போது அணையின் மொத்த நீர் இருப்பு 38.20 டிஎம்சியாக பதிவாகியுள்ளது. அணையின் முழு கொள்ளளவான 120 அடியுடன் ஒப்பிடும்போது, இது மிகவும் குறைவான அளவாகும்.

நீர்வரத்து குறைந்தபோதிலும், குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு இந்த நீர் திறப்பு மேற்கொள்ளப்படுகிறது.

நீர்வரத்து குறைவு மற்றும் அதிகளவிலான நீர் வெளியேற்றம் காரணமாக அணையின் நீர்மட்டம் தினசரி குறைந்து வருவது விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பருவமழை தீவிரமடைந்து நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b