Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 09 ஜூலை (ஹி.ச.)
தமிழக நகராட்சி நிர்வாகத்தில் நிர்வாக ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, நகராட்சி ஆணையர்கள் மற்றும் நகராட்சி சார்நிலைப் பணியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, 10 நகராட்சி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கூடலூர் நகராட்சி ஆணையர் பி. சுந்தராமன் நாகப்பட்டினம் நகராட்சிக்கும், நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் டி. ஞானசேகரன் பெரம்பலூர் நகராட்சிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இடைப்பாடி நகராட்சி ஆணையர் எஸ். கோவிந்தராஜ் இராசிபுரம் நகராட்சிக்கும், கடையநல்லூர் நகராட்சி ஆணையர் டி. லட்சுமி சங்கரன்கோவில் நகராட்சிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் எம். பாலமுருகன் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கும், வேதாரண்யம் நகராட்சி ஆணையர் டி. சித்ரசேலியா கடையநல்லூர் நகராட்சிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
சீர்காழி நகராட்சி ஆணையர் எம். சக்திகுமார் நெல்லியாளம் நகராட்சிக்கும், சாந்தூர் நகராட்சி ஆணையர் ஆர். ஜெகதீஸ்வரி செங்கோட்டை நகராட்சிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
பெருந்துறை நகராட்சி ஆணையர் கே. புனிதன் சாந்தூர் நகராட்சிக்கும், சின்னமனூர் நகராட்சி ஆணையர் டி.டி. கோபிநாத் கோயம்புத்தூர் மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த பணியிட மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக நகராட்சி நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P