தமிழக மாம்பழம், கொப்பரை கொள்முதல் அறிவிப்புக்கு பிரதமருக்கு நன்றி -நயினார் நாகேந்திரன்
சென்னை, 09 ஜூலை (ஹி.ச.) தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், தமிழகத்தில் இருந்து ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,545 என்ற விலையில் 96,879 டன் தோத்தாபுரி மாம்பழங்களையும், மொத்தம் ரூ.1,049 கோடி ஆதரவு விலை மதிப்பில் 8,226 டன் கொப்பரைத் தேங்
நயினார்


சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், தமிழகத்தில் இருந்து ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,545 என்ற விலையில் 96,879 டன் தோத்தாபுரி மாம்பழங்களையும், மொத்தம் ரூ.1,049 கோடி ஆதரவு விலை மதிப்பில் 8,226 டன் கொப்பரைத் தேங்காயையும் கொள்முதல் செய்ய மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

சந்தையில் மாம்பழ விலை கடுமையாக சரிந்ததால் டன் கணக்கில் மாம்பழங்களை குப்பையில் கொட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்த தமிழக விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றி, அவர்களுக்கு நியாயமான விலை கிடைக்க வழிவகுக்கும் முக்கியமான நடவடிக்கையாக மத்திய அரசின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கை தமிழக கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்றும், ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் தமிழக விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒட்டுமொத்த தமிழகமும் நன்றிக்கடன் பட்டுள்ளது என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P