Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 09 ஜூலை (ஹி.ச.)
நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் 19-ந் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களிடம் இருந்த ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து வந்தனர்.
அப்போது நாட்டில் ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 30-ந் தேதி நிலவரப்படி ரூ.5 ஆயிரத்து 451 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ரூ.2,000 நோட்டுகளில் 98.47 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள நோட்டுகளை பொதுமக்கள் தொடர்ந்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் அறிவிக்கப்பட்ட வங்கி கிளைகளில் மாற்றிக்கொள்ளலாம்.
மேலும், இந்தியாவில் உள்ள எந்த தபால் நிலையத்தின் மூலமாகவும் ரூ.2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி, அதற்கான தொகையை தங்களது வங்கி கணக்கில் வரவு வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டாலும், அவை தற்போது வரை சட்டபூர்வமான பணமாக (Legal Tender) தொடர்கின்றன என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA