சென்னை நட்சத்திர விடுதியில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
சென்னை, 09 ஜூலை (ஹி.ச.) பல்வேறு கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவரான தனசேகர், கடந்த சில மாதங்களாக காவல்துறையினரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், அவர் கிண்டி பகுதியில் உள்ள நட்சத்திர வ
சென்னை நட்சத்திர விடுதியில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது


சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)

பல்வேறு கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவரான தனசேகர், கடந்த சில மாதங்களாக காவல்துறையினரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில், அவர் கிண்டி பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் ரகசியமாக தங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

செங்குன்றம் காவல்துறை ஆணையர் தலைமையில் எண்ணூர் போலீசார் அடங்கிய தனிப்படை விடுதியை அதிகாலையில் சுற்றி வளைத்தது.

தப்பிக்க முயன்ற தனசேகரை போலீசார் துப்பாக்கியை காட்டி எச்சரித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தனசேகரிடம் இருந்து கைத்துப்பாக்கி, சொகுசு கார், விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவருக்கு உதவியாக இருந்தவர்கள் யார், வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

நட்சத்திர விடுதியில் தங்கியிருந்து ரவுடி ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b