Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ஆசிப், வயது 27, மற்றும் பிரதீப், வயது 28, ஆகிய இருவரும் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் நுங்கம்பாக்கம் பெட்ரோல் பங்கிற்கு நேற்று இரவு வந்துள்ளனர்.
வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிய பின்னர், பணம் கொடுக்க மறுத்து அங்கிருந்த ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் சேர்ந்து பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதைக் கண்ட சக ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட ஆசிப் மற்றும் பிரதீப் ஆகிய இருவரையும் கைது செய்தனர். காயமடைந்த ஊழியர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொது இடங்களில் போதையில் அத்துமீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b