Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)
பள்ளி மற்றும் கல்லூரிகளில் தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவிற்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலரும், வழக்கறிஞருமான கவிகணேசன் தாக்கல் செய்துள்ள மனுவில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கும் நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசு தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஒத்திவைத்தது.
Hindusthan Samachar / P YUVARAJ