Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 09 ஜூலை (ஹி.ச.)
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஐந்தாங்கட்டளையில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் எரிந்து சேதமடைந்த சம்பவத்திற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விவசாயிகள் கடுமையாக உழைத்து அறுவடை செய்த நெல்மணிகளை முறையாகப் பாதுகாக்காமல் மழையில் நனைந்து வீணாகவும், கோடையில் தீயில் கருகியும் நாசமாக விடுவது அரசின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு போதுமான நிரந்தரக் கட்டிட வசதிகள் இல்லாததே நெல் சேமிப்பில் ஏற்படும் இழப்புகளுக்கு முக்கிய காரணம் என்றும், உணவுத் தானியங்களை பாதுகாக்க அரசு உடனடியாக நிரந்தர சேமிப்புக் கிடங்குகளை அமைத்து, நியாய விலைக் கடைகள் மூலம் தரமான அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam