மதுரையில் மாந்திரீகவாதி வெட்டிக் கொலை - மது போதையில் பயங்கரம்
மதுரை, 09 ஜூலை (ஹி.ச.) மதுரை சர்வேயர் காலனி பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே நேற்று இரவு மாந்திரீகவாதியாக அறியப்பட்ட ராஜா ஜெய்சிங்( வயது 55) என்பவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ராஜா ஜெய்சிங்கும் அவருடன் இருந்த சிலரும் ஒன்றாக மது
Sorcerer hacked to death in Madurai


மதுரை, 09 ஜூலை (ஹி.ச.)

மதுரை சர்வேயர் காலனி பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே நேற்று இரவு மாந்திரீகவாதியாக அறியப்பட்ட ராஜா ஜெய்சிங்( வயது 55) என்பவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

ராஜா ஜெய்சிங்கும் அவருடன் இருந்த சிலரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு, அது முற்றிய நிலையில் ஒருவர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் ராஜா ஜெய்சிங்கை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை மாநகர போலீசார், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், மது போதையில் ஏற்பட்ட தகராறே கொலைக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வேயர் காலனி பகுதியில் நடந்த இந்த கொடூர சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b