Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்து கடந்த சில மாதங்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இவர் நடித்த கடைசி திரைப்படமானது ஜன நாயகன். இப்படமானது சென்சார் கிடைக்காமல் இருந்த நிலையில், தற்போது இப்படத்திற்கு தணிக்கை குழு ஏ தரச் சென்சார் சான்றிதழை படக்குழு வழங்கியுள்ளது.
கோலிவுட் சினிமாவில் உச்ச நாயகனாக இருந்து, அரசியலில் களமிறங்கி முதலமைச்சரானவர் தளபதி விஜய். இவர் தற்போது தமிழக முதல்வராக பணியாற்றிவருகிறார். இவரின் நடிப்பில் ஜன நாயகன் படமானது இறுதியாக நடித்திருந்த நிலையில், தற்போது இதற்கு சென்சார் கிடைத்துள்ளது. இப்படத்திற்கு ஏ தரச் சென்சார் கிடைத்துள்ளதாம். இப்படத்திற்கு ஏ தரச் சென்சார் கிடைத்திருக்கும் நிலையில், இதை 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே திரையரங்குகளில் சென்று பார்க்கமுடியும். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை.மொத்தம் 3 மணிநேரம் 3 நிமிடம் 11 வினாடிகள் ஓடக் கூடியதாக ஜனநாயகன் படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகன் படத்துடய சென்சார் சான்றிதழ் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. படம் விரைவில் வெளியாகவிருப்பதால் விஜய்யின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
---------------
Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV