இரண்டு சோதனை சாவடிகளை ஒரே இடத்தில் வைத்து செயல்பட தென்காசி ஆட்சியர் உத்தரவு
தென்காசி, 09 ஜூலை (ஹி.ச.) தென்காசி மாவட்டம், தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள புளியரை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக தொடர் புகார்கள் எழுந்த
Tenkasi Collector Ranjeet Singh


தென்காசி, 09 ஜூலை (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள புளியரை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக தொடர் புகார்கள் எழுந்தன.

மேலும், புளியரை பகுதியில் போக்குவரத்து சோதனை சாவடி மற்றும் காவல் துறையினர் சோதனை சாவடி என இரு சோதனை சாவடிகள் உள்ள நிலையில், இரண்டு சோதனை சாவடிகளிலும் சோதனைக்காக வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன நெரிசலானது ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தன.

இந்த நிலையில், இரண்டு சோதனை சாவடிகளையும் ஒரே இடத்தில் வைத்து செயல்பட தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.

அதாவது, தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜித் சிங் பிறப்பித்த உத்தரவில் காவல்துறை சோதனை சாவடி செயல்பட்டு வரும் இடத்தில் போக்குவரத்து சோதனை சாவடியும் சேர்த்து செயல்பட உத்தரவு பிறப்பித்த நிலையில், தற்போது இரண்டு சோதனை சாவடிகளும் ஒரே இடத்தில் தற்போது செயல்படுத்த தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN