Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 09 ஜூலை (ஹி.ச.)
திருமலை வெங்கடேஸ்வரர் கோவிலில் ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு, ஜூலை 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஜூலை 17ஆம் தேதி ஆனிவார ஆஸ்தானம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடாக ஜூலை 14ஆம் தேதி கோவில் முழுவதும் கழுவி சுத்தம் செய்யப்படும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
இதனால், ஜூலை 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மிக முக்கிய பிரமுகர்களைத் தவிர மற்ற பக்தர்களுக்கு விஐபி பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, கட்டண பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்ட சேவைகள் நடைபெறாது என்றும் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P