சாதி சான்றிதழை புதுப்பித்து தருமாறு தனது மனைவியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு
திருவண்ணாமலை, 09 ஜூலை (ஹி.ச.) திருவண்ணாமலை அடுத்த புனல்காடுமேடு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி குப்புசாமி (42), இவருக்கு திருமணம் ஆகி தினேஷ் மற்றும் திலீப் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர், இருவரும் அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வருகின்றனர
Tiruvannamalai Taluk office


திருவண்ணாமலை, 09 ஜூலை (ஹி.ச.)

திருவண்ணாமலை அடுத்த புனல்காடுமேடு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி குப்புசாமி (42), இவருக்கு திருமணம் ஆகி தினேஷ் மற்றும் திலீப் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர், இருவரும் அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வருகின்றனர்.

மேலும் குப்புசாமிக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு இவர் குடும்பத்திலேயே முதல் முறையாக இவருக்கு தான் பண்ணியாண்டி வகுப்பை சேர்ந்தவர் என்று அரசு மூலம் ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, பின்னர் தினேஷ் மற்றும் திலீப் ஆகிய இருவருக்கும் பள்ளியில் சேர்வதற்கும் பண்ணியாண்டி என்று ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட பண்ணியாண்டி வகுப்பு சான்றிதழை மீண்டும் புதுப்பித்து தருமாறு பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பலமுறை மனு அளித்தும் ஜாதி சான்றிதழை ஆன்லைன் மூலமாக புதுப்பித்து தராததால் ஆத்திரமடைந்த குப்புசாமி இன்று தனது மனைவியுடன் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார், பின்னர் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் அங்கு வந்த காவலர் அவர்களை சமாதானம் செய்ய முயன்ற போது அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில்,

அரசு சலுகைகளைப் பெற ஜாதிச் சான்றிதழ் கேட்கவில்லை எனவும், எனது பிள்ளைகள் படிப்பில் முன்னேறி நல்ல நிலைமைக்கு வருவதற்காக மட்டுமே ஜாதிச் சான்றிதழ் கேட்பதாகவும் கூறியவர், ஏற்கனவே வழங்கப்பட்ட அடிப்படையில் ஜாதி சான்றிதழை வழங்க வேண்டும் எனவும், அதே நேரத்தில் வழங்கப்பட்ட ஜாதி சான்றிதழை புதுப்பித்து தர வேண்டும் என்பதே எனது கோரிக்கையாக உள்ளது என்றும் கூறினார்.

இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்ட பொழுது

இவருக்கு ஏற்கனவே பண்ணியாண்டி வகுப்பை சேர்ந்தவர் என்று ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவர் ஆதிதிராவிடர் சமூக உட்பிரிவில் பன்னியாண்டியை சேர்க்க வேண்டும் என்று மனு அளித்ததாகவும், அதனை நாங்கள் முழுமையாக விசாரணை செய்து அவருக்கு தர முடியும் என்று கூறிய அவர்கள், இவரது உறவினர்கள் போளூர் பகுதியில் உள்ளனர், அவர்களுக்கு எந்த வகுப்பின் கீழ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதோ அதன் அடிப்படையில் இவர்களுக்கு சான்றிதழ் வழங்க ஏற்பாடுகள் செய்து தருவதாக

தெரிவித்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN