வால்டாக்ஸ் சாலை இளைஞர் கொலை வழக்கில் 2 சிறார்கள் கைது
சென்னை, 09 ஜூலை (ஹி.ச.) சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, எம்.சி. ரோடு பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் (21) தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்ததோடு, பகுதி நேரமாக ''ரேபிடோ'' (Rapido) பைக் டாக்ஸி ஓட்டுநராகவும் செயல்பட்டு வந்தார். ஜூல
வால்டாக்ஸ் சாலை இளைஞர் கொலை வழக்கில்  2 சிறார்கள் கைது


சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, எம்.சி. ரோடு பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் (21) தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்ததோடு, பகுதி நேரமாக 'ரேபிடோ' (Rapido) பைக் டாக்ஸி ஓட்டுநராகவும் செயல்பட்டு வந்தார்.

ஜூலை 6 ஆம் தேதி நள்ளிரவு (சுமார் 11:30 - 12:05 மணியளவில்), வசந்தகுமார் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகிலுள்ள வால்டாக்ஸ் சாலை சுரங்கப்பாதை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம், வசந்தகுமாரின் வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது.

இதனால் இருதரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறின் போது, அந்த வாகனத்தில் வந்த நபர்கள் திடீரென கத்தியை எடுத்து வசந்தகுமாரின் கழுத்து மற்றும் உடலில் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பியோடினர்.

பலத்த காயமடைந்த அவர், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பூக்கடை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட வசந்தகுமாரும், கொலையில் ஈடுபட்ட சிறார்களும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும், ஏரியாவில் எந்த டீம் பெரியது என்ற முந்தைய குழு மோதல் பகையும் இதற்கு ஒரு காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வால்டாக்ஸ் சாலை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, தலைமறைவாக இருந்த 3 சிறார்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்

கைது செய்யப்பட்ட சிறார்கள் இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b