Enter your Email Address to subscribe to our newsletters

அரியலூர், 09 ஜூலை (ஹி.ச.)
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குழவடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். குறு விவசாயியான இவர், தற்போது 3 ஏக்கர் பரப்பளவில் குழவடையான் சித்தேரி அருகில் குறுவை நெற்பயிர்களை பயிரிட்டுள்ளார்.
இவரைப் போன்று 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் அப்பகுதியில் பயிரிட்டு உள்ளனர்.
இங்கு மோட்டார் பாசனத்தை முழுமையாக நம்பி விவசாயிகள் குறுவை பயிரிட்டு நிலையில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் சரியாக கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் நெற்பயிருக்கு தேவையான தண்ணீரின்றி நெற்பயிர்கள் காய்ந்து கருகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து விவசாயி சசிகுமார் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும், அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தொடர்ந்து மும்முனை மின்சாரம் தட்டுப்பாட்டால், அவரது விவசாய நிலங்கள் தண்ணீர் இன்றி முழுவதும் பாதிப்புக்குள்ளானது.
இந்நிலையில் வாடிய நற்பெயர்களை கண்டு வருத்தமடைந்த விவசாயி சசிகுமார், தனது சொந்த செலவில் வாடகைக்கு ட்ராக்டர் வண்டியில் தண்ணீரை வரவழைத்து, குழாய் மூலம் தண்ணீரை ஊற்றி, பயிர்களை காப்பாற்றுவதற்கு கடைசி முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரது முயற்சியை பார்த்த சக விவசாயிகள் மத்தியில் வேதனையை கிளப்பியுள்ளது.
இவரைப் போன்று 50க்கும் மேற்பட்ட சிறுகுறு விவசாயிகள் மின்சாரம் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற முடியுமா? காய்ந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்குமா? என்றும், வாங்கிய விவசாய கடனை எப்படி அடைக்கப் போகிறோம் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலரும் என்ன செய்வதென்றே தெரியாமல் உள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN