Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
அறச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 3) அரசு விழாவாக அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி விழா நடைபெறும் பகுதியில் 3 கி.மீ. சுற்றளவில் செயல்படும் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் விழாவுக்கு ஊர்வலமாக செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் அன்று மூடப்பட்டிருக்க வேண்டும்.
எனவே ஈரோடு மூலப்பாளையம், அசோகபுரம், ஈரோடு ரெயில் நிலையம் எதிரில் உள்ள எலைட் மதுபான கடைகள் நாளை மறுநாள் மாலை 6 மணி வரை செயல்படாது என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.
மேலும் வடபழனி, அறச்சலூர், வாங்கலாம்வலசு, அவல்பூந்துறை, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு, கந்தசாமிபாளையம், முத்தூர்ரோடு மாரப்பம்பாளையம், சோலார், ஆனைக்கல்பாளையம், பச்சப்பாளி, ஈரோடு நாடார்மேடு, பெருந்துறை ஆர்.எஸ். ஆகிய பகுதிகளில் செயல்படும் 13 மதுபானக்கடைகளும் அன்று மூடப்பட்டு இருக்கும்.
அன்றைய தினம் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b