Enter your Email Address to subscribe to our newsletters

கவுகாத்தி , 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
அசாமில் பருவமழை காரணமாக பெய்து வரும் கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் கோல்பாரா, காக்சார், லக்கிம்பூர், திப்ரூகர், ஜோர்ஹட், பிஸ்வநாத், சராய்தியோ, நல்பாரி, பக்சா, சிவசாகர், தர்ரங், சோனித்பூர், தின்சுகியா, உதல்குரி, கோலாகாட், கர்பி அங்லோங் உள்ளிட்ட 25 மாவட்டங்கள் கடுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
மேலும், 600-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளநீரில் மூழ்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பல பகுதிகளில் வெள்ளநீர் படிப்படியாக வடிந்து வருவதால் பாதிப்புகளும் குறைந்து வருகின்றன.
இருப்பினும், மாநிலத்தின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1.92 லட்சம் மக்கள் இன்னும் வெள்ளப் பாதிப்பில் இருந்து முழுமையாக மீளாமல் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், வெள்ளம் தொடர்பான தனித்தனி சம்பவங்களில் மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.
இதன் மூலம் அசாமில் பருவமழை மற்றும் வெள்ளம் தொடர்பான உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA